Tuesday, June 23, 2020

வாஞ்சிநாதன்

Image may contain: 7 people17 ஜூன் 1911 ஆங்கிலேய அரசு அலறி துடித்த நாள்.. உலகம் முழுவது பரபரப்பாக இந்த கொலையை பற்றி பேசிய நாள்.
ஆம் நண்பர்களே இதே நாளில் வாஞ்சிநாதன் என்னும் 25து வயதேயான இளைஞர் திருநெல்வேலி கலெக்டர்ராக இருந்த அஷ் துறையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்றார். சென்ற நூற்றாண்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் கொலைவழக்குகளில் இந்த வழக்கும் ஒன்று. இந்த கொலை தான் இந்திய சுதந்திரத்திற்கே பிள்ளையார் சுழி போட்ட கொலை.
இந்த வழக்கின் அணைத்து ஆவணங்கள், விசாரணை முழுவிபரங்கள் வழக்கின் தீர்ப்பு அனைத்தும் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது, இணையத்தில் தேடினாலும் கிடைக்கும். அந்த தீர்ப்பிலுள்ளவற்றை சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். தயவு செய்து ஒரு இரண்டு நிமிடம் படித்து, முடிந்தால் நம் இளைஞர்களுக்கும் பகிருங்கள்.
வாஞ்சிநாதன் கொலை வழக்கு அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் :
1. நீலகண்ட பிரமச்சாரி (முக்கிய குற்றவாளி)
2. சங்கரகிரிஷ்ணா ஐயர் (அஷ் கொலையின்போது உடனிருந்தவர்)
3. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை (காய்கறி வியாபாரி)
4. முத்துக்குமாரசாமி பிள்ளை (பானை வியாபாரம்)
5. சுப்பையா பிள்ளை (குமாஸ்தா)
6. ஜெகநாத ஐயங்கார் (சமையல்காரர்)
7. ஹரிஹர ஐயர் (வியாபாரி)
8.பாபு பிள்ளை (வியாபாரி)
9. தேசிகாச்சாரி (வியாபாரி)
10. வேம்பு ஐயர்(சமையல்காரர்)
11. சாவடி அருணாச்சலம் பிள்ளை (விவசாயி)
12. அழகப்பா பிள்ளை (விவசாயி)
13. வந்தே மாதரம் சுப்ரமணிய ஐயர் (ஆசிரியர்)
14. பிச்சுமணி ஐயர் (சமையல்காரர்)
ஆறுமுக பிள்ளை மற்றும் சோமசுந்தர பிள்ளை அரசாங்க தரப்பு சாட்சிகளாக மாறினார்.
போலீஸ் தங்களை தேடுகிறார்கள் என்று தெரிந்து தர்மராஜா ஐயர் விஷம் குடித்தும் மற்றும் வெங்கடேச ஐயர் கழுத்தை அறுத்தும் தற்கொலை செய்துகொண்டார்கள்.
திருச்சி வி.வி, எஸ். ஐயர், திருநெல்வேலி சுப்பிரமணிய பாரதி, ஸ்ரீனிவாச ஆச்சாரி, நாகசாமி ஐயர் மற்றும் ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை இவர்கள் மீது பிடி வாரண்ட் இருந்தது இதில் முதல் நால்வர் பாண்டிச்சேரியில் இருந்ததால் பிடிக்கமுடியவில்லை, ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை தான் அஷ் துறை மீது துப்பாக்கி சூடு நடக்கும் போது வாஞ்சிநாதனுடன் இருந்தவர் ஆனால் இவரை கடேசிவரை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை..
பொதுவாக குற்றம் நடந்த இடத்தின் அதிகாரவரம்பிற்கு உட்பட்ட நீதிமன்றமான திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில் தான் நடந்திருக்க வேண்டும் அனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை தாமே முன்வந்து எடுத்து விசாரித்தது.
சென்னை உய்ரநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சார் அர்னால்டு வைட் , மற்றும் நீதிபதி அய்லிங் ஆகிய வெள்ளைக்கார நீதிபதிகளும் நீதிபதி சங்கரன் நாயர் என்ற இந்திய நீதிபதியும் விசாரணை நடத்தினர்.
ஆந்த காலகட்டத்தில் பொதுவாக கொலைவழக்குகளின் ஜூரி (நடுவர் குழு) நியமிக்கப்படும், இந்த ஜூரியில் பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுத்து வழக்கின் தன்மைக்கேற்ப 9 நபர் முதல் 12 நபர் குழுவை நியமிப்பார், இந்த குழுதான் குற்றம்சாட்டப்பட்டவர்களை தீர விசாரித்து குற்றவாளியா அல்லது நிரபராதியா என்னும் முடிவை நீதிபதிகளுக்கு தெரிவிக்கும், இந்த ஜூரியின் முடிவை வைத்தே நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள். அனால் காலெக்ட்டர் அஷ் கொலைவழக்கில் ஜூரி அமைக்கப்படவில்லை, நீதிபதிகளே நேரடியாக விசாரித்தார்கள்.
அரசு தரப்பு வழக்கறிஞர்களாக, நேப்பியர், ரிட்மென் மற்றும் சுந்தர சாஸ்த்ரி ஆஜரானார்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிறையபேர் இருந்ததால் ஏராளமான அக்காலத்து மிக சிறந்த வழக்கறிஞர்கள் எல்லாம் ஆஜரானார்கள் , அவர்களுள் பாரிஸ்டர் ஜே. சி. ஆடம்.. மிக திறமையாக குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வெள்ளைக்கார வழக்கறிஞர், அவரை தவிர வழக்கறிஞர் தந்தூரி பிரகாசம் (பின்னாளில் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவர்), டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் (பிற்காலத்தில் திருவாங்கோர் உய்ரநீதிமண்டத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்), எம், ஏ, கோவிந்தராகவ் ஐயர், எஸ்.டி. ஸ்ரீநிவாச கோபாலச்சரி, விரையுறு நம்பியார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கலெக்டர் அஷ் பொதுவாகவே இந்தியர்களை வெறுக்கும் குணமுடையவர், இந்தியர்களை மிகவும் கொடூரமாகவும் கீழ்த்தனமாகவும் நடத்திய பல நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டடு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது., சுதேசி கப்பலை முடக்கி வஉசி மற்றும் சுப்ரமணிய சிவா அவர்களுக்கு தேசத்ரோகவழக்கில் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கிக்கொடுக்க கலெக்டர் அஷ் மூர்க்கத்தனமாக செயல்பட்டார் என்றும், கோரல் மில் போராட்டத்தின் போது அந்த போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களை தரையில் அமரச்செய்து அவமானப்படுத்தி மிரட்டியதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டு ஏழு தொழிலாளர்கள் பலியாக காரணமாக இருந்தார், இதில் மூவர் தலித் தோழர்கள். கலெக்டர் அஷ் மீது தொடர்ந்து இந்தியர்களை தனது கடுமையான அடக்குமுறையால் அடக்கியாள நினைத்தார் அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் வெறுப்பாக மாறி அவருக்கு எதிராக திருநெல்வேலி ஜில்லமுழுவதும் போராட்டம் நடந்தது அந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்.. கட்டுக்கடங்காமல் போன அவரின் அத்துமீறல்கள் காரணமாகவே அவற்றின்மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை கொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டது என்ற முடிவிற்கு நீதிமன்றம் வந்தது.
வாதிதரப்பும், பிரதிவாதி தரப்பிற்குமிடேயே நடந்த வாதம் அனல்பறந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆங்கிலேய நீதிபதிகள் இருவர் கூட்டாக தமது தீர்ப்பை வெளியிட்டனர், இந்திய நீதிபதியான சங்கரன் நாயர் மிக தைரியமாக இந்திய சுதந்திர போராட்டத்தை ஆழமாக தமது தீர்ப்பில் அலசியிருந்தார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சதிசெய்தார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை என்றும் நீலகண்ட பிரமச்சாரியின் குற்றம் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பெழுதிய அவர் தனது தீர்ப்பின் முடிவில் `என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்' என்னும் மகாகவி பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டி மிகச்சிறப்பான தீர்ப்பை வெளியிட்டார் .இந்த தீர்ப்பு அக்காலத்தில் சிறந்த தீர்ப்பாக கொண்டாடப்பட்டது அந்த தீர்ப்பை அப்படியே Role of students in freedom movement with a special referencet to Madras Presidency என்னும் பெயரில் புத்தகமாக வெளியிட்டார்கள்.
நீதிபதிகளின் பெரும்பாலான தீர்ப்பினடிப்படையில் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், சங்கர கிருஷ்ணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மற்றவர்களுக்கு எல்லாம் குறைந்த தண்டனையே வழங்கப்பட்டது.
இந்த கொலை நடந்து 109 ஆண்டுகள் உருண்டடோடிவிட்டது, இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட அனைவரும் மிகவும் சாதாரணமானவர்கள், 20 முதல் 30 வயது இளைஞர்கள், உதவி, ஆறுதல், அரவணைப்பு இல்லாமல் இவர்களின் மனைவி, மக்கள் எல்லாம் கஷ்டப்பட்டு கஞ்சிக்கே வழியில்லாமல் மாய்ந்து போனார்கள், வாஞ்சிநாதனின் இளம் விதவை பொன்னம்மாள் பட்ட கஷ்டத்தையெல்லாம் விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதையெல்லாம் ஒருகணம் நினைத்து பாருங்கள். காலவோட்டத்தில் இந்த தியாகிகளின் தியாகமும், சிந்திய ரத்தமும், கண்ணீரும் மக்களின் நினைவிலிருந்து காற்றோடு காற்றாக கரைந்துபோய்விட்டது. அஷ் துறையை கொலை செய்ய தூண்டியது இவர்களின் நாட்டுப்பற்றே தவிர வேறு எந்த சொந்த விருப்பும் வெறுப்பும் கிடையாது.. அனால் காலவோட்டத்தில் இப்பொழுது தியாகிகளை போற்றுவதற்கு பதிலாக நீதிமன்றமே அடக்கு முறையை கையாண்டார் இந்தியர்களை வெறுத்தார் என்று ஓபுண்கொண்ட அஷ் துறைக்கு மலர்வளையம் வைக்க ஒரு கும்பல் அறியாமையில் கிளம்பிவிட்டது.. இதை நினைக்கும்போது நெஞ்சம் குமுறுகிறது.
தியாகி வீர வாஞ்சிநாதன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
வதந்தி ஒன்று - குற்றாலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை குளிக்க அனுமதித்தார் கலெக்டர் ஆஷே ??
பதில் - முதலில் குற்றாலம் திருநெல்வேலி ஜில்லாவிற்குள் வராது, குற்றாலம் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு கீழ் வரும், அஷ் துறையே குற்றாலத்தில் குளிக்கபோகணும்னா சமஸ்தானத்துக்கிட்ட அனுமதி வாங்கணும் அப்படி இருக்க ஆஷ் எப்படி குற்றாலத்துல எல்லா சாதி மக்களும் குளிக்கலாம் என்று எப்படி ஆணை பிறப்பிக்க முடியும் ?? சிந்தியுங்கள்
வதந்தி இரண்டு - ஒரு தலித் பெண் பிரசவ வழியில் துடித்தாராம் ஆஷ் துறையும் அவனது மனைவியும் தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அக்ராஹாரத்து வழியில் எடுத்து சென்றார்களாம் மருத்துவமனைக்கு ?
பதில் - 1911ம் வருடம் இந்தியாவில் வீட்டிலிருந்தே பிரசவம் பார்க்கும் பழக்கம் கடைபிடிக்க பட்டது... அந்த காலகட்டத்துல சாமானியர்களுக்கு மருத்துவமனை எல்லாம் ஆங்கிலேயர்கள் கட்டவில்லை. நம்ம ஊரு நாட்டு வைத்தியச்சி தான் பிரசவம் பார்ப்பார்கள். மேலும் ஆங்கிலேய கலெக்டர்கள் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லவோ, பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவோ முடியாது என்கிறது ICS Officers guidelines. 1930ல் தான் இந்தியாவில் காரே அறிமுகமானது.
ஆஷே ரோம்ப நல்லவர் வல்லவர் என்று உளறி போஸ்டர் போஸ்டர் அடிச்சு மலர்வளையத்தை தூக்கிட்டு சுத்துற இலைகர்களே கொஞ்சம் சிந்தியுங்க.. அரசியல் லாபத்திற்காக, பொது விருப்பு வெறுப்புகளுக்காக தயவு செய்து சுதந்திர போராட்ட தியாகிகளை கொச்சைப்படுத்தாதீர்கள், உங்கள் பாதம் தொட்டுகேட்டுக்கொள்கிறேன். நாம் இன்று சுதந்திர நாட்டில் எழுத்து, பேச்சு, கருது சுதந்திரம் என்னும் பெயரில் யாரை வேண்டுமானாலும் கேள்விகேட்கிறோமே, சுதந்திர காற்றை சுவாசிக்கிறோமே, இதற்கான விலையை நமது முன்னோர்கள் என்றோ கொடுத்துவிட்டார்கள். Our ancestors had already paid for our freedom.
புரட்சியாளர் பகத் சிங்கிற்கு முன்னோடி நம் வீர வாஞ்சிநாதன் அவரின் தியாகத்தை போற்றுவோம்..
ஜெய் ஹிந்த்