Saturday, December 9, 2017





அடால்ஃப் ஹிட்லர் தங்கப் பல் கட்டிக்கொண்டு இருந்தார். ஹிட்லர் உயிரோடு இருந்தபோது அவரின் பல் வைத்தியர் எடுத்திருந்த X-ray படம் இணைக்கப்பட்டுள்ளது. இறந்து 25 வருடங்களுக்கு அப்புறம் எடுக்கப்பட்டது கலர் போட்டோ. அதைப்பற்றிய கதை எழுதியுள்ளேன். நேரம் வீணானால் பரவாயில்லை என்றால் படியுங்கள்:
கம்யூனிஸ்டுகள் பொதுவாகவே கண்ணியமற்ற, உணர்ச்சியற்ற மனிதர்கள். அவர்களின் மகுடம் ஜோஸஃப் ஸ்டாலின். இவர் அரிசந்திரனின் ஆப்போசிட். உயிரே போனாலும் உண்மை பேச மாட்டார். ஸ்டாலினின் பொய்கள் சீக்கிரமே வெளியே வந்துவிடும். அனால் அதை அமைச்சர்கள் பெருமையாக 'ராஜதந்திரம்' என்று புகழவேண்டும். அமைச்சர் யாராவது பொய் என்று குறிப்பிட்டுப் பேசினால் உடனடியாகக் கொன்றுவிடுவார். உலகத்திலேயே மிகவும் பயந்த ஆனால் கொலை செய்ய அஞ்சாத மனிதன். இவரின் ஸ்பெஷாலிடியே இவருக்கு யார்மேலாவது பயம் அல்லது சந்தேகம் வந்தால் அவரைக் கொன்றுவிடுவதுதான். மொத்தம் மாஸ்க்கோவில் ஓடியதே மிகசில கார்கள்தான். அந்த மிகச்சில கார்கள் மோதி இவரைக் கேள்விகேட்ட மிகப்பல அமைச்சர்கள் இறந்தார்கள். அதெப்படி டிராபிக்கே இல்லாத ரோடில் கார் மோதி இறக்க முடியும்? என்று இரவு விடுதிகளில் கேள்வி கேட்டவர்கள் இறந்தார்கள். இதைப்பற்றியெல்லாம் பேசினால் நாமும் இறந்துவிடுவோம் என்று தங்களுக்குள் ஜோக் அடித்தவர்களும் இறந்தார்கள். இப்படியாக இவரால் கொலை செய்யப்பட்ட ரஷ்யர்கள் சுமார் 4 கோடி பேர். இவர் பயந்து நடுங்கிய, ஆனால் கொல்ல முடியாத, இவரைக் கொல்ல வந்த ஜெர்மானிய வீரன்தான் அடால்ஃப் ஹிட்லர்.
ஃபிரான்ஸ்,ஸ்விட்சர்லாந்த், ஹங்கேரி, போலந்து, ஃபின்லாந்த், செக், பெல்ஜியம், நெதர்லாந்து எல்லாவற்றையும் வென்று கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மானிய படை ரஷ்யாவில் நுழைந்தபோது.... கொடுங்கோலர் ஸ்டாலினின் கம்யூனிச ஆட்சியில் துன்புற்ற, மகன்களை இழந்த, ஏழ்மையில் உழன்ற தாய்மார்கள் ரொட்டியும், நீரும் கொடுத்து வரவேற்றனர். ஆனால் ஜெர்மானியப்படை முன்னேறக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில், அவர்களுக்கு உதவி செய்யக்கூடும் என்று தன்னாட்டின் விவசாயிகளையே கொன்று, தானியங்களை கொள்ளை அடித்தார் ஸ்டாலின். தன் நாட்டின் சாலைகளை சேதப்படுத்தினார் . சர்ச்சில் ஸ்டாலினுடன் சேர்ந்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இடம் உதவி கேட்டது முப்பெரும் சக்திகளை இணைத்தது. அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலை மேற்கில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது ஜெர்மனி. ஜெர்மானிய படையின் ரஷ்யப் பகுதி முன்னேற்றம் தடைப்பட்டது. குளிர்காலம் முற்றும் முன்பு மாஸ்க்கோவை அடைய முடியவில்லை. மாஸ்க்கோவின் கடும் குளிர், பனியைப் பொறுக்க முடியாமல், தங்க இடம் இல்லாமல் தவித்தது ஜெர்மன் படை. பலவீரர்கள் குளிரில் இறந்தனர். ஜெர்மனியின் வீழ்ச்சி தொடங்கியது.
உலகப் போர் முடிய இன்னும் நான்கு மாதங்கள் இருந்தன. ஜெர்மனி சரணடைய இன்னும் ஒரு வாரமே இருந்தது. அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலை முடித்துவிட்டு இங்கிலாந்தில் வந்து இறங்கி ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்ஸில் புகுந்து ஜெர்மனியை நோக்கி வந்து கொண்டிருந்தன. ருஷ்ய கம்யூனிஸப் படைகள் ஜெர்மனியில் கிழக்கு முகத்தில் புகுந்து பெர்லின் வரை ஒரே ஒரு ஜெர்மானிய பெண்ணைக் கூட விடாமல் ரேப் செய்துகொண்டிருந்தன. ஏப்ரல் - 30- 1945 அடால்ஃப் ஹிட்லர் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்டார். தன் மனைவி ஈவாவுக்கு சயனைட் விஷத்தைக் கொடுத்தபின் துப்பாக்கியை எடுத்து தாடையின் கீழ்ப்பக்கம் வைத்து மேல்நோக்கி சுட்டுக் கொண்டார். ஜெர்மானியப் பத்திரிக்கை ஒரு நாள் விட்டு மறுநாள் செய்தியும் வெளியிட்டது. தான் இறந்தவுடன் தன் உடல் எதிரிகளின் கையில் கிடைக்காதவாறு பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுமாறு உயிர்காப்பாளரிடம் சொல்லி இருந்தார். அவர் உடல் முழுதும் எரிய மிச்சம் இருந்தது மண்டை ஓடும், கீழ் பல்வரிசை எலும்பும்தான்; கலர் படத்தில் இருப்பது அவர் கீழ் பல்வரிசை. வாயின் இடது பக்க பற்களில் ஹிட்லர் தங்கப் பல் கட்டிக்கொண்டு இருந்தார். அவரின் பல் வைத்தியர் ஏற்கனவே எடுத்திருந்த X-ray படம் நீங்கள் பார்ப்பது. ருஷ்ய கம்யூனிஸப் படைகள் பெர்லினை முற்றுகையிட்டு கற்பழிப்புகளுக்கு இடையில் ஹிட்லரின் சாம்பல், மண்டை ஓட்டைக் கைப்பற்றின. X-ray உதவியுடன் அது ஹிட்லருடையதுதான் என்று ஊர்ஜிதமானவுடன் அதை ஒரு பேழையில் போட்டு கடத்தி சென்றார் ஸ்டாலின். எதற்கு என்று கேட்கிறீர்களா? அதுதான் கம்யூனிசத்துக்கே உரிய கேவலமான புத்தி.
ஸ்டாலின் இப்போது உயிரோடு இருக்கக் காரணமே அமெரிக்கா ஜெர்மனியுடன் மோதியதுதான். ஆனால் உயிரைக் காப்பாற்றியவன் கூட நிம்மதியாக இருந்தால் கம்யூனிஸ்டுக்கு பிடிக்காதே? ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இடம் சொன்னார்: "உங்களுக்கு ஒன்று தெரியுமா? சல்லடை போட்டு பெர்லின் முழுதும் தேடிவிட்டோம்; அடால்ஃப் ஹிட்லர் கிடைக்கவில்லை. ஜெர்மானிய U boat நீர்மூழ்கிக கப்பல் மூலம் ஜப்பானுக்கு தப்பிச் சென்றுவிட்டார் ஹிட்லர். ஜப்பானில் இருந்து உங்களைத் தாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்". தென்னமெரிக்க நாடுகள் எல்லாமே கம்யூனிசவாதிகளின் பிடியில் இருந்தன. அர்ஜென்டினா தவிர. பிறகு ஸ்டாலின் சொன்னார் "அர்ஜென்டினாவில் இருக்கிறார் ஹிட்லர். உங்களைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள்" . அதாவது ஸ்டாலினின் எண்ணம் ஜப்பான், அமேரிக்கா இரண்டுக்கும் சண்டை மூட்டிவிட வேண்டும். குறைந்த பட்சம் வலதுசாரி ஆட்சி நடக்கும் வலிவற்ற நாடான அர்ஜென்டினா கூடவாவது சண்டை மூளவேண்டும் . அப்போதுதான் அமெரிக்கர்களுக்கு ஜெர்மனியில் கம்யூனிஸப் படைகள் ரேப் செய்வது தெரியாது என்ற புத்திதான். பிறகு ரூஸ்வெல்ட் இறந்தார். ட்ரூமேன் அமெரிக்க அதிபர் ஆனார். ஜப்பானுடன் அமெரிக்கப் போர் வலுத்தது. ஹிரோஷிமா, நாகசாகி மீது நான்கு மாதங்களில் குண்டு விழுந்தது. உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு விழும் வரை ஜப்பான் மீது படையெடுக்க அஞ்சிய ஸ்டாலின், நாகசாகி மேல் குண்டு விழுந்தவுடன் சைபீரியா, ஹொக்கைடோ முதலிய இடங்களில் ஜப்பானிய படைகளுடன் போர் செய்ய கம்யூனிச படைகளை ஏவினார்.
கடைசியில் ஸ்டாலின் மார்ச் -1-1953ல் மாரடைப்பால் இறந்து போனார். எதைப்பார்த்து பயந்தாரோ, கனவில் ஹிட்லர் வந்தாரோ, என்னவோ படுக்கையறையில் ஸ்டாலினின் உடல் அவரின் மூத்திரத்தில் பலமணி நேரமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து ருஷ்ய அதிபராக பதவியேற்ற குருஷேஃப்(Khrushchev) ஸ்டாலின் போன்று கொடூரமானவர் இல்லை. பதவிக்காலம் முடிந்து இறக்கும் போது 1971ல் என நினைக்கிறேன், "ஹிட்லரின் சாம்பல், பற்கள் எங்களிடம் தான் இருக்கின்றன. ஸ்டாலின் பொய் சொல்லிவிட்டார்" என்று சொல்லி ஆதாரமாக ஜெர்மன் டாக்டர்களுடன் சேர்ந்து இந்தப் படங்களை வெளியிட்டார். பிறகு ஹிட்லரின் சாம்பல் ஜெர்மனியில் ரைன் நதியில் கரைக்கப்பட்டது.
ஸ்டாலின் எப்படிப்பட்ட வீரர் என்றால், அவர் ஒரே ஒரு போரில் கூட சண்டையிட்டதில்லை. ஆனால் அடால்ஃப் ஹிட்லர் பயம் என்றால் என்னவென்றே அறியாதவர். முதல் உலகப் போரில் குண்டுபாய்ந்து காயம்பட்டவர். அவருக்கு தீராமல் இருந்தது குண்டுபாய்ந்த காயத்தின் வலி அல்ல. ஜெர்மனி சதியால் முதல் உலகப் போரில் தோற்ற வலி. தன்னுடன் பயிற்சி செய்த பவேரிய வீரர்கள் சரணடைய வேண்டிவந்த நிர்ப்பந்தத்தைப் பார்த்த அவமானம். பிரான்ஸ், இங்கிலாந்து இரண்டும் சேர்ந்துகொண்டு மிரட்டி உலகப்போருக்கு அபராதமாக ஜெர்மனி பணம் கட்டவேண்டும் என்றெல்லாம் இருந்த இழிநிலை. பழிவாங்க பொங்கி எழுந்த ஹிட்லரை பெரும் வெறியனாக்கியது. இரண்டாம் உலகப்போர் முடியும் முன்னர் 1 கோடியே இருபது லட்சம் யூதர்களைக் சித்திரவதை செய்து கொல்லவைத்தது. போரில் அமெரிக்கா , ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய மொத்தம் 20 மடங்கு பெரிய நாடுகள் எல்லாம் சேர்ந்து ஜெர்மனியை மீண்டும் தோற்கடித்தன. [இந்த இரண்டு போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் கடனாளிகளாக இருந்த ஜெர்மானியர்களை, உலகின் மிகப் பெரும் பணக்காரர்களாக ஆக்கினார் ஹிட்லர். ரஷ்யாவில் ராணுவம் நீங்கலாக மொத்தமே சில டஜன் கார்கள் இருந்த காலத்தில் AUDI கார் கம்பெனியை ஆரம்பித்து ஜெர்மானிய சாலைகளில் ஆயிரக்கணக்கில் கார்களை ஓடவிட்டவர் ஹிட்லர். இதைப்பற்றி நண்பர்கள் கேட்டால் எழுதுவேன்].
இதை நான் எழுதுவது ஹிட்லரைப் புகழ அல்ல. ஆனால் இன அழிப்பு வெறியர் ஹிட்லரையே நல்லவராக்கும் அளவுக்கு கேவலமான ஐந்து ஸ்டாலின் என்று சுட்டிக்காட்டத்தான். இப்போது நம்ம ஊரில் பார்க்கிறீர்களே, இந்தப் "பிணத்தை வைத்து அரசியல்" செய்வதின் தந்தை ஸ்டாலின்.