Tuesday, May 7, 2013


பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கபட்ட உதவிகளை பறித்தெடுத்த றிசாத் பதியுதீன் Published on June 15, 2012-7:06 am · No Comments தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களுக்கு செய்திருக்கும் மற்றுமொரு கொடுமை அம்பலத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு என இந்தியா வன்னி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு ஒரு தொகுதி படகுகள், இயந்திரங்கள், வலைகளை வழங்க உள்ளது. இதில் 175படகுகள், அவைகளுக்குரிய 15குதிரை வலுகொண்ட இயந்திரங்கள், வலைகள் ஆகியன வழங்கப்பட உள்ளன. இவை ஒவ்வொன்றும் 6இலட்சம் பெறுமதியானவையாகும். ஒருபடகு இயந்திரம் வலை அடங்கிய தொகுதி இரு மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் படி 350 மீனவர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளன. இந்திய தூதரகம் இவற்றை கடற்தொழில் அமைச்சுக்கே வழங்கியுள்ளன. அவர்களே பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கூட்டம் ஒன்றும் கடந்த 8ஆம் திகதி இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் வன்னி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கும் நிலையில் றிசாட் பதியுதீன் தெரிவு செய்த 350 பயனாளிகளுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன என மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். றிசாத் பதியுதீன் தெரிவு செய்த 350 பயனாளிகளில் 326பேர் முஸ்லீம்கள், 34பேர் மட்டும் தமிழர்கள். தெரிவு செய்யப்பட்ட தமிழர்களும் போரினால் பாதிக்கப்பட்டு தமிழ் தொழில் உபகரணங்களை இழந்தவர்கள் என்ற ரீதியில் தெரிவு செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பின்னால் திரிபவர்களே இதில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். 175படகுகளில் 17படகுகள் மட்டும் தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது. மிகுதி 158 படகுகள் மற்றும் இயந்திரங்கள் வலைகள் முஸ்லீம்களுக்கே வழங்கப்படுகிறது. றிசாத் பதியுதீன் தெரிவு செய்தவர்களில் பல முஸ்லீம்கள் மீன்பிடி தொழில் செய்யாதவர்கள் என மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொற்கேணி, அல் ஜசீரா, அகத்திமுறிவு, மன்னார் மாவட்டத்தில் உள்ள மாங்குளம், ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களும் இதில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீன்பிடித்தொழிலே செய்வதில்லை. கடந்த காலங்களில் இவர்களிடம் மீன்பிடி படகுகளோ வலைகளோ இருந்ததில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த கால யுத்தத்தால் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மீனவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். போர் இடம்பெற்ற காலத்தில் தமது படகுகளுடன் வங்காலை, மன்னார் பகுதியை சேர்ந்த தமிழ் மீனவர்கள் தமிழகத்திற்கு சென்றிருந்தனர். இவ்வாறு சென்றவர்களில் சுமார் 300படகுகளை தமிழக கரையோர காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். மீண்டும் அவர்கள் இலங்கைக்கு திரும்பி செல்லும் போது அவற்றை திருப்பி தருவதாக இராமநாதபுரம், மண்டபம் பகுதி ஆட்சியாளர்கள் கடிதங்களையும் வழங்கியிருந்தனர். ஆனால் மன்னார் பகுதி மீனவர்கள் இலங்கைக்கு திரும்பிய போது அவர்களிடம் படகுகள் ஒப்படைக்கப்படவில்லை. அதனை தமிழக மீனவர்களுக்கு வழங்கிவிட்டோம். அதற்கு பதிலாக நஷ்டஈடு தருவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த 300க்கும் மேற்பட்ட மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழக அரசிடம் தமது படகுகளை இழந்து விட்டு தொழில் செய்ய வழியின்றி தவிக்கும் போது இந்தியா வழங்கிய படகுகள் பாதிக்கப்படாத முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக மன்னார் மீனவர்கள் ஆதங்கப்படுகின்றனர். 2006ஆம் ஆண்டு பேசாலையில் கடற்படை மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்தியதை அடுத்து 100க்கு மேற்பட்ட வாடிகளும் படகுகளும் வலைகளும் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு கூட இந்தியாவினால் வழங்கப்பட்ட படகுகள் வழங்கப்படவில்லை. மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டு றிசாத் பதியுதீன் தெரிவு செய்த முஸ்லீம்களுக்கே இந்தியாவின் உதவிகள் வழங்கப்படுவது குறித்து யாழ். நகரில் உள்ள இந்திய உதவி தூதுவர் மகாலிங்கத்திடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் 10ஆயிரம் சைக்கிள்களை இந்தியா வழங்கியிருந்தது. அதுவும் றிசாத் பதியுதீன், மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சிபார்சு செய்த சிலருக்கும் வடமாகாண ஆளுநர் சிபார்சு செய்த வெலிஓயா போன்ற இடங்களில் உள்ள சிங்களவர்களுக்குமே வழங்கப்பட்டது. அது போல முன்றுசக்கர உழவு இயந்திரங்கள் கூட வெலிஓயா மற்றும் வவுனியா தெற்கில் உள்ள சிங்களவர்களுக்கும் இராணுவ தேவைகளுக்குமே வழங்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென வெளிநாடுகளும் சிறிலங்கா அரசாங்கமும் வழங்கும் உதவிகள் 90வீதமானவை வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிப்பதற்கும் முஸ்லீம்களுக்குமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகளும் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மட்டுமே கிடைப்பதாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்ந்த அவலநிலையிலேயே இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.