Thursday, August 28, 2025

இயேசு என்னும் கிருஷ்ண பக்தர்

part - A . மொழியியல் தொடர்பு ஆராய்ச்சி :
======================================
கிரேக்க வரலாற்று ஆசிரியர் மெகஸ்தனிஸ் எழுதினார்: "கேஞ்சஸ் கரையில் மன்னன் நந்தஸ் 80,000 எலபஸ் வைத்துள்ளதாக மன்னன் போரஸ் சொன்னதால் பேரரசர் அலெக்ஸ்சாண்டர் திரும்பிவிட்டார்..... 5 வருடம் முடிவதற்குள் கௌடில்யஸ் என்னும் ராஜதந்திரி அறிவுரைப்படி சந்திரகோட்டஸ் எங்கள் மேல் படையெடுத்து வந்து பெர்சியா வரை அலெக்ஸ்சாண்டர் ஜெயித்த எல்லாவற்றையும் வென்றுவிட்டான். தளபதி செல்யூகஸ் நிகேட்டாரைத் தோற்கடித்து உடன்படிக்கை செய்துகொள்ள வைத்தான். அமைதியை நிரந்தரப்படுத்த 500 எலபஸ், தங்க நாணயங்கள் கொடுத்துவிட்டு செல்யூகஸ் நிகேடரின் தங்கையை மணம் முடிந்து சொந்த பந்தமாக்கிக் கொண்டான். " கேஞ்சஸ் - கங்கை நதி; நந்தஸ் - நந்தன்; எலபஸ் - எலும்புள்ளது ( எலபான்டஸ் ) - தந்தம் உள்ள போர் யானைகள். போரஸ் -- மன்னன் புரு (புருஷோத்தமன்); கௌடில்யஸ் - கௌடில்யன் - சாணக்கியன் சந்திரகோட்டஸ் - சந்திரகுப்தன் - பேரரசர் சந்திரகுப்தர் ஆம், அப்படிதான் செல்யூகஸ் நிகேடார் சாசனத்தில் எழுதினான். அப்படியேதான் மெகஸ்தனீஸ் வரலாற்றுக் குறிப்பெடுத்துக்கொண்டான். புராதன ஐரோப்பிய மொழிபெயர்ப்பில் (கிரேக்கம், லத்தீனம், ஹீப்ரு, இயேசு பேசிய அராமிக்) கங்கை - கேஞ்சஸ் ஆனது. கௌடில்யா - கௌடில்யஸ் ஆனார். புரு - போரஸ் ஆனான். சந்திரகுப்தன் - சந்திரகோட்டஸ் ஆனான். சூர்யா(சூர்யன்) - சூயஸ் ( zeus - sun god கிரேக்க சூரியக் கடவுள்) தர்மன் - தமோஸ் இவை அனைத்துமே கிமு விலேயே எழுதப்பட்ட மொழியாக்கங்கள். அதாவது இயேசு பிறப்பதற்கு/கதைக்கு முன்பே. ஒரு விஷயம் கவனியுங்கள், மேலுள்ள பெயர்கள் எல்லாம் "ஸ்" ல் முடிவதை. இவை மட்டுமல்ல பல கிரேக்க, யூதேய, ரோமானியப் ஆண் பெயர்கள் "இஸ்" ல் முடியும். சாக்ரடீஸ், மார்கஸ், ஜுயஸ், ஹெர்மிஸ், ப்ரூட்டஸ், அரேலியஸ், அர்கீமிடிஸ், அக்கிலீஸ். (அல்லது ஆண் பெயர்கள் "ஆர்" ல் முடியும்.. சீசர், ஹெய்க்டார், அலெசாண்டர் எனப்பல) . பெண்கள் பெயர் "ஆ"வில் முடியும். அலெக்ஸா,சான்ரா, மோனா,லிசா,கிளியோபாட்ரா,கிளாரா,கிளாரிடா(என்றால் குட்டி கிளாரா என்று பொருள் - நம்மூர் குட்டி ராதிகா மாதிரி),மாயா and so on . (*ஆங்கிலோ சாக்ஸன் மொழிபெயர்ப்பு வேறு; புராதன கிரேக்க மொழிபெயர்ப்பு வேறு). ஒருமுறை காஞ்சீபுரம் மகாபெரியவா வேதத்தை குறிப்பிட்ட த்வனி, உச்சரிப்பில் மாற்றிப் பாடச்சொல்லி வந்திருந்த யூதர்கள் அவர்களின் புனித நூலான தோரா போன்றிருக்கிறது என்று அசந்து போயினராம். ( இஸ்லாம் - குரான், கிறித்தவம் -பைபிள், யூதம் - தோரா ). பொதுவாக கிறித்தவர்கள் முஸ்லிம்களுடன் கலந்தொழுகும் போது, போலியாக "நாமெல்லாம் ஒன்றே. ஆப்ரகாம் - இபுறாகீம், David - Dawood ஆக மாறியது. ஜோசப் - யூசுஃப் ஆனது. நாமெல்லாம் சகோதரர்கள்" என்று சொல்வார்கள். அவர்களிடம் கேளுங்கள் இஸ்மாயில், ஆயத்துல்லா, ஆபெல், ஜான் எல்லாம் எப்படி ஆனது என்று. பதிலிருக்காது. இதுதான் உண்மை: தோராவில் மன்னன் அபிராகாஹாமின் மகன்கள் இசாக், இஸ்மேல். ராணி சாராக்கு பிறந்தவன் இசாக், அவனுக்கு யூதேயாவை கொடுத்த ஆபிரஹாம், வைப்பாட்டி ஹாகருக்கு பிறந்ததால் இஸ்மேல் லுக்கு அரேபிய பகுதிகளைக் கொடுத்து வெளியேற்றுகிறான். இஸ்மேல் தான் குரானில் இஸ்மாயில் என்னும் முஸ்லீம் பெயரானது. யூத மதத்தில் இருந்து ஆபிரகாமின் காரணமாக இரண்டாக்கப் பிரிந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் ஆனதால் இம்மூன்றும் ஆபிரகாமிய மதங்கள் எனப்படுகின்றன. குரானின் படி இயேசு - "ஈஸா நபி" - மர்யத்துக்கு பிறந்தவர். ஆனால் முகம்மது நபி தானே உண்மையான இறைத்தூதர், ஈஸா நபி கடவுள் கிடையாது என்று பிற்காலத்தில் அறிவித்தமையால் இயேசு பூஜிக்கத்தக்கவர் அல்லர். என் மொழிகள் - பெயர் ஆராய்ச்சியை புறந்தள்ளி, இப்போது நேரிடையாக விஷயத்துக்கு வருகிறேன்: இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் இந்தப் பெயர்கள் 1.ஆபிரகாம், 2.சாரா, 3.இயேசு, 4. கிறிஸ்து 5. ஜோசப் ஆகியவை கிடையாது. குறிப்பாக பண்டைய யூதேயா பகுதியில் கிடையவே கிடையாது. பண்டைய யூதேயா என்பது தற்போதைய ஜெருசலேம், இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் போன்றவற்றை உள்ளடக்கிய வளமற்ற பகுதி. கேள்வி ) மேலே சொன்ன ஏசுவின் பித்ருக்கள் ஐந்து பேரின் பெயர்கள் எங்கிருந்து வந்தன? பிறந்தவுடன் ஏசுவுக்கு அந்தப் பெயர் வைக்கப்படவில்லை. பிற்காலத்தில் தான் அவ்வாறு அறியப்பட்டார் - விவேகானந்தர் (நரேந்திரன்), சின்மயானந்தர்(ராமகிருஷ்ண மேனன்) போல ஏற்றுக்கொண்ட ஞானப்பெயர். இயேசுவின் அம்மா பெயர் மரியம் என்றே தோராவில் உள்ளது. இயேசு பேசிய அராமிக் மொழியின் உண்மையான அர்த்தம் *இளம்பெண் மரியத்தின் கணவன் முதிர்ந்த யோசேப்பு*. அதுவே ஹீப்ரூ மொழிக்குப் போய் , கிரேக்க, லத்தீன் மொழிக்கு போய் ஆங்கிலத்தில் வந்தடைந்த போது *கன்னி மேரியின் கணவன் திரு.ஜோசப்* என்று மாறியது. மரியத்தின் இருப்பை புனிதப்படுத்துவதற்காக இளம்பெண் என்பது 'கன்னி' என்று வேண்டுமென்றே திரித்து மாற்றப்பட்டதாக வாதமும் உண்டு. அதாவது வயதான கணவனைப் பிடிக்காமல் வேறொருவன் தொடர்பில் பிறந்த குழந்தை என்ற ஏளன எண்ணம் வருவதைத் தவிர்க்க. இவ்வாதம் உண்மையும் கூட - ஏனெனில் யேசுவுக்கு குழந்தை ஏசுவாக அறியப்பட்ட ஏசு சிறுவனாக வளர்ந்த பின் கதைகள் இல்லை. முழுதும் வளர்ந்த ஆம்பிளையாகவே அவர் மீள் அறிமுகமாகிறார். அவர் வாழ்க்கையின் நடுவில் பல அவர் ஞானத்தேடலில் 2000 வருடங்களுக்கு முன் எல்லோரும் செய்ததுபோல் புண்யபூமியான பாரதத்துக்கு புனிதப்பயணம் செய்தார்.


Part - B இயேசு தானே அறிவித்துக்கொண்ட குடும்பப் பெயர்கள்
=======================================================
இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் இந்தப் பெயர்கள் 1.ஆபிரகாம், 2.சாரா, 3.இயேசு, 4. கிறிஸ்து 5. ஜோசப் ஆகியவை கிடையாது. குறிப்பாக பண்டைய யூதேயா பகுதியில் கிடையவே கிடையாது. பண்டைய யூதேயா என்பது தற்போதைய ஜெருசலேம், இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் போன்றவற்றை உள்ளடக்கிய வளமற்ற பகுதி.  கேள்வி: மேலே சொன்ன ஐந்து பேரின் பெயர்கள் எங்கிருந்து வந்தன?  பிறந்தவுடன் ஏசுவுக்கு அந்தப் பெயர் வைக்கப்படவில்லை. பிற்காலத்தில் தான்  அவ்வாறு அறியப்பட்டார் - விவேகானந்தர் (நரேந்திரன்), சின்மயானந்தர்(ராமகிருஷ்ண மேனன்) போல ஏற்றுக்கொண்ட ஞானப்பெயர். இயேசுவின் அம்மா பெயர் மரியம் என்றே தோராவில் உள்ளது. இயேசு பேசிய அராமிக் மொழியின் உண்மையானபதிப்பில் சாசனப்படுத்தப்பட்டது:  *இளம்பெண் மரியத்தின் கணவன் முதிர்ந்த யோசேப்பு*.  அதுவே ஹீப்ரூ மொழிக்குப் போய் , கிரேக்க, லத்தீன் மொழிக்கு போய் ஆங்கிலத்தில்  வந்தடைந்த போது *கன்னி மேரியின் கணவன் எஜமானன் ஜோசப்* என்று மாறியது. மரியத்தின் இருப்பை புனிதப்படுத்துவதற்காக இளம்பெண் என்பது 'கன்னி' என்று வேண்டுமென்றே திரித்து  மாற்றப்பட்டதாக வாதமும் உண்டு. அதாவது வயதான கணவனைப் பிடிக்காமல் வேறொருவன் தொடர்பில்  பிறந்த குழந்தை என்ற ஏளன எண்ணம் வருவதைத் தவிர்க்க. இவ்வாதம் உண்மையும் கூட - ஏனெனில் கூடப் பிறந்தவர்கள் என யேசுவுக்கு யோவான், சிமியோன், யோஸே என மொத்தம் 7 சகோதர சகோதரிகள் -  மரியம் வயிற்றில் பிறந்தவர்கள் உள்ளனர். குழந்தை ஏசுவாக அறியப்பட்ட ஏசு சிறுவனாக வளர்ந்த பின் கதைகள் இல்லை. முழுதும் வளர்ந்த நடுவயதுள்ள  சட்டாம்பிளையாகவே அவர் மீள் அறிமுகமாகிறார். அவர் வாழ்க்கையின் நடுவில் பல பக்கங்களைக் காணோமே? காரணம்,   2000 வருடங்களுக்கு முன் பெரும்பாலான நாடுகளில் இருந்த பேரறிஞர்கள்  செய்ததுபோல்  அவரும்  ஞானத்தேடலில்  புண்யபூமியான பாரதத்துக்கு புனிதப்பயணம் செய்தார். இமாயலத்தில் தவம் செய்ததும், பூனைக்கண் சித்தர் என்று பேசப்பட்டார் என்றும் , கௌடிய மட குருமார்களைச் சந்தித்ததும் தெரிகிறது. எப்படி போதிதர்மன் திரும்பினாரோ அதுமாதிரி இயேசுவும் தாய்மண்ணுக்கு திரும்புகிறார்.  ஜெருசலேத்தில் உள்ளோர் இவரின் ஞானக் கருத்துக்களை, யோக , தியான முறைகளை புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. நேரெதிராக அங்குள்ள வழிபாட்டிடங்களில்(யூதக்கோவில்கள்) காட்டுமிராண்டித்தனம் செய்தனர். இவர்களுக்கு விவேகம், உயர் ஞானம், யோக மார்க்கம் புரிய வாய்ப்பில்லை என்பதால் எளிதான பரம்பொருளான கிருஷ்ண பக்தியை அவர்களுக்கு சொல்ல ஆரம்பித்தார். இங்குதான் முதன்முதலாக இஸாக் வழித்தோன்றல்களான 12 குடிகளைவிட்டு மட்டும் கடவுள் காப்பாற்றுவார் என்ற யூத ஐதீகத்தை விட்டுவிட்டு உலக அளவில் அனைவரையும் பேசுகிறார் யேசு. அவர் குலத்தின் முன்னோர்களான தாவீதின் குமாரன், சாலமனின் குமாரன் என்று தன்னை மட்டும் சொன்னவர் ஏன் எல்லோரையும் "நாமெல்லாம் ஆபிரகாமின் குழந்தைகள், கடவுளின் குழந்தைகள்" என்று சொன்னார்? கிருஷ்ண பக்தி மரபில் பிரம்மாவே உலகத்தைப் படைத்தார். ஆகவே ஆணித்தரமாக மலைப்பிரசங்கத்தில் யேசு அராமிக் மொழியில் அறிவிக்கிறார். உண்மையான கடவுள்களை யூதர்களுக்கு அறிவிக்கிறார். தான் பெற்ற பேரின்பத்தை, ஆன்மீக விடுதலையை, அவர் வெறும் யூதக்குடி அல்லர் உலகின் உயர்ந்த இந்து மதத்தை ஏற்றவர் என்பதை முழங்குகிறார் :  "உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் உருவாக்கியவர் பிரம்மாவே, ஆகவே அனைவரையும் நேசியுங்கள் நாம் அனைவரும் சரஸ்வதியின் தேவன் பிரம்மனால் உருவாக்கப்பட்டவர்கள்". (அதாவது LOVE THY NEIGHBOR) என்று பைபிள்) அதை பிற்காலத்தில் யேசுவின் சகோதரன் யோவான்(John) எழுதுகிறான். part - A  வில் விளக்கப்பட்ட  பன்மொழி மாற்று விதிகளின் படி ப்ரம்மன் மொழிபெயர்ப்பில் பிரம்கம் ஆகி அபிரகாம் ஆனது. சரஸ்வதி - சரஸ் ஆகி "ஸ்" ஆண் பெயர் எழுத்து ஆனதால் ஒதுக்கப்பட்டு   "சாரா" என்பது மட்டும் மிஞ்சியது. பிரம்மா - சரஸ்வதி கடைசியில் ஆங்கிலத்தில் Abraham - Sarah  ஆனது.  இயேசுவின் ஞானக் கடவுள், பரப்பிரம்மத்தின் பூலோக அவதாரம்  கிருஷ்ணனே. வசுதேவருக்கு பிறந்தவன் ஆயினும் வளர்ந்ததோ கோகுலத்தில் வசுதேவ்க்கு சம்பந்தமே இல்லாமல் - அவனின் சேஷ்டைகள் பெரும் குறும்புக்காரன், மாயக்காரன் "யசோதை மகன் கிருஷ்னன்" என்றே கோகுலம் முழுதும் ஒலித்தன. தன்னை "யசோதாவின் மகன் கிருஷ்ணன்"  - "யசோத கிருஷ்ணன்" என்றே யேசு சொன்னதுவே யேசு கிறிஸ்து ஆகிற்று.   பெற்றாலும் வசுதேவ் எங்கோ இருக்கிறார் - அந்த வசுதேவ் - யோசேப் (ஜோஸஃப் Joseph) ஆகிற்று.  இயேசு தன்னை "கிருஷ்ணன் பக்தன்" என்று கூறிக்கொள்கிறார். அது பல மொழிபெயர்ப்பில் "கிருஷ்ணனின் சிஷ்யன்" என்றாகி யூதமரபின் படி "கிருஷ்னனின் மகன்" என்றே பாராட்டப்படுகிறது. கிருஷ்ண ஞானமரபுப்படி ஒவ்வொருவரும் கிருஷ்ணனின் மாயையே ஆகையால் இயேசு தன்னையே கிருஷ்ணன் படைத்ததாகவும், தானே ஆண்டவனாகிய கிருஷ்ணன் வெளிப்பாடே என்கிறார். இதுவே "I am the God and I am the Son of the God" என்று இரண்டையுமே இயேசு சொல்வதாக வருகிறது.  ஆகவே 1.ஆபிரகாம் - பிரம்மன் , 2.சாரா - சரஸ்வதி , 3.இயேசு - யசோதா (வின் மகன்), 4. கிறிஸ்து (கிருஷ்ணன் ) 5. ஜோசப் (கிருஷ்ணின் தந்தை வசுதேவ் ) இப்பொது தெள்ளத்தெளிவாக பைபிள் ஏன் "நாம் அனைவரும் ஆபிரகாம்  சாராவின் வழித்தோன்றல்கள் /   குழந்தைகள்"  என்றும் உண்மையில் தேவமகனான யேசுவின் தந்தை எப்படி யோசேப்பு ஆகும் என்பதுவும் தெரியும். 

No comments: