மதுரை மன்னன் வீரபண்டியனுக்கு துரோகம் செய்த முஸ்லீம்கள்
--------------------
மதுரையில் வீரபாண்டியன் ஆண்டபொழுது அவன் படையில் 20,000 முஸ்லீம் படைவீரர்கள் இருந்தனர். இந்த முஸ்லீம் படையினர் முழுக்க முழுக்க இந்துவாக இருந்தவர்கள். பின்பு இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள். மதம் மாறியவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. தேசிய உணர்வும் மாறிவிட்டது. ஆம்.
மாலிக் காபூர் படைகள் வீரபாண்டியனை எதிர்த்தபோது அவன் படையில் இருந்த இஸ்லாமிய வீரர்கள் மாலிக் காபூர் படையில் சேர்ந்துவிட்டனர். காரணம் மாலிக்காபூர் இஸ்லாமியன் என்பதாலேயே. வீரபாண்டியனுக்காகப் போராட வேண்டிய, இந்த தேசத்திற்காகப் போராட வேண்டிய முஸ்லீம்படையினர், இந்த நாட்டின்மீது படையெடுத்து வந்த- இந்த நாட்டைக் கொள்ளையடிக்க வந்த- மாலிக்காபூர் படையில் அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காகச் சேர்ந்தனர். இங்கு மதமாற்றப்பட்டவனின் தேசிய உணர்வு மாறிவிட்டதை உணரலாம். இந்தச் சம்பவத்தை இஸ்லாமிய அறிஞரான அமிர் குஸ்ரூவும் உறுதிப்படுத்துகிறார்.
அமிர் குஸ்ரூ வீரபாண்டியனின் படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டதாகவும் அவர்கள் கலீமா ஓத தெரிந்திருந்ததால் மாலிக் காபூர் அவர்களைத் தன் படையில் சேர்த்து பதவிகள் அளித்ததாகவும் கூறுகிறார். மேலும் மாலிக் காபூரின் படைகள் பட்டணம் எனும் நகரத்தை அடைந்தபோது அந்த நகரத்தை ஆண்ட பாண்டிய குரு என்பவரின் படையில் முஸ்லீம்கள் இருந்ததாகவும் பாண்டிய குரு சுல்தானின் படைகள் வந்தபோது தப்பித்துச் சென்றார் என்றும் அவரது படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டனர் என்றும் அமிர் குஸ்ரூ கூறுகிறார். (ஆதாரம்: அமிர் குஸ்ரூ “காஸாஇனுல் பதூர்” (Khazain-ul-Futooh வெற்றியின் பொக்கிஷம்) மொழிபெயர்ப்பு முகமது ஹபீப் (மெட்ரா 1931) பக்.99, & John Dowson History of India பாகம் – 3 பின் இணைப்பு : பக்.550-551.)
இந்த வரலாற்றுச் சம்பவத்தை கே.கே.பிள்ளையும் உறுதிப்படுத்துகிறார்:
“கி.பி.1311இல் மாலிக்காபூர் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலைநகரான உறையூருக்கருகிலிருந்த பீர்தூலைத் தாக்கினான். போரின் நடுவில் பாண்டியனின் படையிலிருந்து 20,000 முகம்மதியர்கள் திடீரென்று எதிரி மாலிக்காபூர் பக்கம் சேர்ந்துகொண்டனர்.” (–கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும்)

No comments:
Post a Comment