Wednesday, April 13, 2011
நீதியின் வேகம் :
இன்று தேர்தல் நாள். ஐந்து வருடம் ஆட்சி முடிந்து தேர்தல். கூடவே ஒரு தீர்ப்பும் வந்திருக்கிறது. நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.. செய்தியே போதுமானது என நினைக்கிறேன் : சேரன்மாதேவி எம்எல்ஏவின் வெற்றி செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு First Published : 13 Apr 2011 04:29:26 PM IST-- Dinamani சென்னை, ஏப்.13: 2006 பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவியில் வேல்துரை எம்எல்ஏ பெற்ற வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேல்துரை தற்போது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 2006 தேர்தல் நடைபெறும்போது தமிழக அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருந்ததால் அவர் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வேல்துரை பெற்ற வெற்றி செல்லாது என இன்று தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மனோஜ் பாண்டியன், வேல்துரை அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதாக 2006 தேர்தலில் மனுத் தாக்கலின்போதே தான் ஆட்சேபம் தெரிவித்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எனினும் தேர்தலுக்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ததாகவும், அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வந்துள்ளது என்றார் அவர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி எம்எல்ஏவாக வேல்துரை கடந்த 5 ஆண்டுகாலத்தில் பெற்ற ஊதியம், படிகள் அனைத்தையும் திரும்ப அளிக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment