Sunday, April 19, 2009

பிரபாகரன் இறந்தால் நான் கண்ணீர் வடிப்பேன் - கலைஞர்

ஒரு ஆற்றங்கரையில் மரத்தின் மீது ஒரு காகம் அமர்ந்து இருந்தது. இரு ஜோடி மான்கள் தாகம் தீர்க்க ஆற்றில் நீர் அருந்தின. பெண்மான் சினையாக இருப்பது தெரிந்தது. மயக்கத்தில் பெண்மான் நீரருந்த ஆண்மான் எச்சரிக்கையுடன் பார்த்து நின்றது. திடீரென்று பாய்ந்த ஒரு பெரு முதலை பெண்மானை நெருங்க ஆண்மான் குறுக்கே பாய்ந்தது முதலையிடம் சிக்கியது. பெண்மான் துள்ளிப் பின்வாங்கி தன் துணை கண்முன்னே இரையாவதைக் கண்டு துடித்தது. காகம் கரைந்து அலறியது.

பெண்மான் பல கெஜம் தள்ளிச் சென்று அழுதுகொண்டே குட்டியை ஈன்றெடுத்துத் தவித்து நின்றது. ஐந்து நிமிடங்களின் மானை விழுங்கிய முதலை, பெண்மானின் நிலையைக் கண்டது. ஓ என்று கதறி அழுதது முதலை. அம்மிக் கல்லில் குழவி உருளுவதைப் போல் பிரண்டு, உருண்டு கதறி அழுதது.

இதைக்கண்ட காகம் 'இப்போது அழுது என்ன பயன்? நீ கொல்வதற்கு முன்னாலேயே சிந்தித்து இருக்க வேண்டும்' என்றது.

முதலை கூறியது : " ஆமாம்.. தப்பு செய்துவிட்டேன்.. பெண்மானைப் பிடித்திருந்தால் குட்டியையும் சாப்பிட்டிருப்பேன்.. ஜோடியாகப் பிடித்திருந்தால் மூன்றையும் சாப்பிட்டிருப்பேன்" என்று முதலை கண்ணீர் வடித்தது

2 comments:

Guru said...

முதலைக் கண்ணீருக்கு இது தான் அர்த்தமா?

kargil Jay said...

Now you knew the meaning :-).. thanks for visit.