திமுக வரக்கூடாது ,, வந்தால் என்ன நடக்கும்,,?
ஒரு சின்ன ரிவியூ....
கருணாநிதியின் 2006 - 2011 வரையான கேடுகெட்ட ஆட்சி நினைவுகள் ..
இந்த அலங்கோலங்கள் ஜெயா ஆட்சியில் அறவே இல்லை .. ஏன் கடந்த 1 வருட எடப்பாடி ஆட்சியில் கூட இந்த நாட்டை சூரையாடும் கொள்ளை கும்பல் அராஜகங்கள் கிடையவே கிடையாது ...
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதிவரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..
முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது வப்பாட்டியுடன் சேர்ந்து அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.
12 முதல் 18 மணி நேர மின் தடை .. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் சர்வநேரமும் பாராட்டு விழா மற்றும் திரை துறையினர் குத்தாட்ட விழாவில் முதல்வர் தவறாமல் பங்கேற்றது ஞாபகம் ..
2011ல் ஆட்சியை இழந்த உடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிரட்டி வாங்கியதாக சேஷாத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
ஆரம்பத்தில் முடிந்தால் கைது செய்யுங்கள் என்று வீரம் காட்டிய ஸ்டாலின் ஒரே மாதத்தில் பணத்தை பைசல் செய்து வழக்கை வாபஸ் பெற சுமூகமாக வழக்கை தீர்த்துகொண்டார் மு.க.ஸ்டாலின்...
ஏப்ரல் 25, 2010 அன்று இந்திய தலைமை நீதிபதி பாலக்ருஷ்ணன் , போலீஸ் டி ஜி பி லத்திகா , மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி , முதர்வர் கருணாநிதி மேடைக்கு முன்பு வழக்கறிஞர்கள் திமுக ரவுடிகளால் தாக்கப்பட்டது அன்று இந்திய தலைப்பு செய்தியானது ...
வழக்கறிஞர் ஒருவரை ரவுடி ஒருவன் முழு செங்கல்லால் ஓங்கி அடிக்க முனையும் புகைப்படம் வைரல் ஆனது .. அப்போது தமிழ்நாட்டின் கருணாநிதி ஏவல் துறை தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கைது செய்தது ..
அது போல பிப் 10 2009 அன்று சென்னை உயர் நீதி மன்ற எல்லைக்குள்ளே , வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மேல் போலீசார் தாக்குதல் நீதிபதிக்கு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டிய காட்சி ...
கிண்டியில் அண்ணா சாலையில் உள்ள செக்கர்ஸ் நட்சத்ர ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும்.
சேலத்து இளவரசர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவர் ஒரு நில விவகாரத்தில் தலையிட்டு தன் பேச்சைக் கேட்கவில்லையே என்கிற ஆவேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி என்பவரின் குடும்பத்தில் 7 பேரை வெட்டிச் சாய்த்ததாக தி.மு.க. ஆட்சியிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அவரைக் கைது செய்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
அவருடைய கட்சி உறுப்பினரான ஒரு நகர மன்றத் தலைவர் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டிருக்கிறார். மாநிலத்தின் முதல்வரான இவருக்கு அந்தத் தகவல் மாலைவரை சொல்லப்படவில்லை. மாலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட பின்பு ஆச்சரியத்துடன் “அப்படியா..?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்கிறார் கருணாநிதி .. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி..
13.10.2006-இல் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் நடந்த வாக்குப் பதிவு மையங்களில் திமுக-வினர் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமான வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது...
வரலாறு காணாத அராஜகம் என்று சொன்னது ..கருப்பு பேன்ட் வெள்ளை சட்டை இளைஞர் அணி ரவுடிகள் ஒவ்வொரு வாக்கு சீட்டாக கிழித்து உதயசூரியனுக்கு குத்தி சாவகாசமாக ஓட்டு போட்டது டிவியில் பார்த்து பெருமைபட்டான் தமிழன் ..
முத்துக்குமார் என்னும் வீர இளைஞன் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான்.
அந்த இளைஞனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் தான் பெற்றெடுத்த ரவுடி மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அறிக்கை வெளியிட்ட இந்த மகா உத்தமத் தலைவனை தமிழகம் பெற்றெடுத்ததற்கு நாம் நிச்சயமாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
பிரபாகரன் என்னும் ஒரு தமிழரின் தாயார்.. 80 வயது மூதாட்டி. பெயர் பார்வதியம்மாள். சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார். படுத்தப் படு்க்கையாகக் கிடக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுமாம்.. அதனால் அவரை அப்படியே திருப்பியனுப்பிவிட்டார் இந்த மனுநீதிச் சோழன்.
கிருட்டிணன் கொலை வழக்கு தள்ளுபடி ,தினகரன் ஆபீசில் மூவர் கொலை,சென்னை சட்டக்கல்லூரியில் போலீசார் கண்முன்னே சாதி சங்க மாணவர்கள் வெறியாட்டம்..
அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும்.
திரையுலகைக் கபளீகரம் செய்ய கருணாநிதியின் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் திமுகவுக்கு எதிராக திரும்பியது..
திருநெல்வேலியில் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், தர்மபுரி, சேலம், கோவை போன்ற இடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிகள் களவு போன விவகாரங்கள் அனைத்தும் கடந்த திமுக அரசின் சட்டம் ஒழுங்கின் லட்சணமாகும்.
நெல்லை துணை மேயர் திமுகவைச் சேர்ந்தவர் கூஜா வெடிகுண்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார் .. போலி மருந்து வழக்கில் கைதான மீனாட்சிசுந்தரம் ஸ்டாலின் சபரீசனுக்கு வாங்கி கொடுத்த மசராட்டி கார் வெளிச்சத்துக்கு வந்தது.
சென்னை பனையூர் ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் இளங்கோ, அவரது மனைவி ரமணி ஆகியோர் ஆகஸ்ட் 24-ம் 2009 தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பல ஏக்கர் சொத்து இருந்தது ..
பொதுமக்கள் மூலம் போலீஸôரிடம் பிடிபட்ட ராஜன் (எ) சண்முகசுந்தரம் போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.. இதில் திமுக அமைச்சரின் பெயர் அடிப்பட்டது ..
அனைத்து அரசுத் துறைகளிலும் வஞ்சகமில்லாமல் புகுந்து விளையாடிய உடன்பிறப்புக்களின் லஞ்ச லாவண்யம்.. கட்சிக்காரர்களின் அடிதடி, மிரட்டல்,. கட்டப் பஞ்சாயத்து.. அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் சொத்துக் குவிப்புகள்.. அத்தனை துறைகளிலும் தனது குடும்பத்தினரின் ஆதிக்கம்.. திரும்பிய பக்கமெல்லாம் தனது வாரிசுகளின் அராஜகச் செயல்கள்..” என்று அப்பாவி மக்களின் கூக்குரல்கள்..
ஆனால் இதெல்லாம் கருணாநிதி காதுகளை எட்டவில்லை... பொட்டு சுரேஷ் , அட்டாக் பாண்டி போன்ற ஈன கொலைகார அக்க்யூஸ்ட்டுளிடம் போலிஸ் டிஐஜி போன்ற IPS அதிகாரிகள் கை கட்டி வேலை செய்த வரலாற்றை நாடு கண்டது .. ...
திமுக ஆட்சியில் கிளை செயலாளர் கூட சுமோவில் பறந்து காவல் நிலையத்தில் புகுந்து அராஜகம் செய்த செய்திகள் வந்தனவே ...
இந்த ஆட்சியில் அப்படி கூற முடியுமா ?
மலை ராஜா என்கிற திமுக MLA நெல்லை பல்கலை கழக துணை வேந்தரை அனைவர் முன்பும் பளார் என்று அறைந்தார் . அராஜக ஆட்சியில் .அவமானத்தில் துணை வேந்தர் ராஜினாமா செய்தாரே ... 2 ஏக்கர் நிலம் என்று மயக்கி பட்டை நாமம் போட்டார் ...
மலை ராஜா என்கிற திமுக MLA நெல்லை பல்கலை கழக துணை வேந்தரை அனைவர் முன்பும் பளார் என்று அறைந்தார் . அராஜக ஆட்சியில் .அவமானத்தில் துணை வேந்தர் ராஜினாமா செய்தாரே ... 2 ஏக்கர் நிலம் என்று மயக்கி பட்டை நாமம் போட்டார் ...
இப்போது யார் கிடைப்பார் , தலையில் மிளகாய் அரைத்து முதுகில் ஏறி சவாரி செய்யலாம் என்று ஏங்கி தவிக்கிறார் .. ....
கருணாநிதியோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக.. தன்னைப் பற்றிய பாராட்டுக் கவிதைகளை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.
ஊழல் செய்தார்கள்.. கொள்ளையடித்தார்கள்.. கொலை செய்தார்கள்.. அராஜகம் நடத்தினார்கள் . அதைவிட அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், கருணாநிதியின் நிர்வாக லட்சணத்தை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்...படித்ததில் பிடித்தது