Friday, February 20, 2009

ஈழம்- தமிழர்கள் -முகமதியர் - முதலமைச்சர் கருணாநிதி

"விடுதலை பெறுவது சுலபம் ; சிறைப்பட்டிருக்கிறோம் என்பதை அறிவது தான் கடினம்"

இன்னும் தமிழர்கள் மாண்புமிகு முதலமைச்சரை தமிழர் தலைவர் எனக் கற்பனை செய்து கொண்டிருப்பதையும், சமீபத்தில் வெளியாகிற, 'தமிழினத்தின் தலைவர்' என அவரைப் புகழ்ந்து, அவரின் செயல்களை நியாயப்படுத்தும் கட்டுரைகளையும் கண்டு ஆச்சர்யமடைகிறேன். மாண்புமிகு. முதலமைச்சர் டாக்டர். கருணாநிதி அவர்கள் "இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படாவிட்டால் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள்" என்று சொல்லிய இருபத்தெட்டே நாட்களில் தலைகீழாக, போனவாரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பகிரங்கமாகவே தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவரே; "அமிர்தலிங்கம் கொலைக்குப் பின் புலிகளை அடியோடு வெறுத்தேன்" என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார் (Dinamalar-Feb-6th). அதற்குப்பின்னும் கருணாநிதியை நம்பும் கள்ளங்கபடமற்ற எழுத்தாளர்களையும், தமிழ் மக்களையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
மத்திய அரசைத் தமிழினத்தலைவர் கருணாநிதி எதிர்க்காததற்குக் காரணம் 'ஜெயலலிதா காங்கிரஸுடன் கூட்டணி வைத்துவிடுவார்' என்ற ராஜதந்திரமாம். இப்படியும் ஒரு கட்டுரையாளர் எழுதுகிறார். தமிழன் செத்தாலும் பரவாயில்லை, ஜெயலலிதா ஜெயிக்கக் கூடாது என்ற தியாக மனப்பான்மையை, இவரை நம்பும் தமிழர்களை, நினைத்தால் கண்ணீர் பொங்குவதை தடுக்க முடியவில்லை.

முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் அமிர்தலிங்கம் கொலைநடந்தபோது கூட இல்லாமல் இப்போது திடீரென அமிர்தலிங்கத்தைப் பிடித்துக் கொள்ளக் காரணம் என்ன? கருத்து வேறுபாடுள்ள தமிழ்த் தலைவர்களை விடுதலைப் புலிகள் கொன்றதுதான் உண்மையான காரணமென்றால் கொலை நடந்தபோதுதானே வெறுப்பு தோன்றும்? பிறகுதானே நாளடைவில் சமாதானமாகும்? அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது ஜூலை 13 1989. அதற்குப் பிறகு 19 வருடங்களாக புலிகளின் மேல் ஏற்படாத வெறுப்பு, 28 நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் இல்லாத வெறுப்பு, ஏதோ போனவாரம்தான் அமிர்தலிங்கம் கொலை நடந்ததுபோல் மனதில் மு.க. நெருடலை ஏற்படுத்தக் காரணம் என்ன? மு.க. தொண்ணூறுகளுக்குப்பின் பின் படிப்படியாக புலிகளை விட்டு விலகி, எதிர்த்து, பின் வெறுக்கக் காரணமாக இருந்தது எது? அவர் பகுத்தறிவுக் கஞ்சியை வருடம் விடாமல் குடித்ததும், தொண்ணூறுகளில் மு.க. முகமதியர் ஓட்டைப் பெற மிகுந்த முயற்சி செய்ததும் கூட இருக்கலாம். நான் காரணமில்லாமல் இதை எழுதவில்லை.

தமிழ் முஸ்லீம்கள், 1981ல் 'ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்' என்ற தமிழ் முஸ்லீம்கள் அமைப்பைத் தொடங்கினர். இவர்களது நோக்கம், முதல் அறிவிப்பே 'நாங்கள் தமிழரல்ல.. முஸ்லீம்கள்.. எங்கள் முன்னேற்றத்துக்குத் (வியாபாரத்துக்கு) தடையாக இருக்கும் தமிழர்கள் எங்கள் எதிரியே.. எங்களுக்கு சிங்கள அரசு உதவி வேண்டும்' என்பதுதான்.

90' களில்விடுதலைப் புலிகளை பலமுறை சிங்கள ராணுவத்திடம் காட்டிக் கொடுத்ததற்காகவும், சிங்கள வெறியர்களுக்கு ஒற்றுவேலை செய்ததற்காகவும், விடுதலைப் புலிகள் குறைந்தது 11 முறை முஸ்லீம்களின் மேல் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 4/8/1990 ல் காட்டன்குடி மசூதியில் விடுதலைப் புலிகள் 300 முஸ்லீம்களை துரோகம் செய்தற்காகவும், வேவு பார்த்ததற்காகவும் சுட்டுக் கொன்றனர். (காட்டன்குடி சம்பவம் பற்றி மும்பையில் ஒரு முஸ்லீம் பெண்மணி ஆவேசமாக என்னிடம் வாதாடினார். இஸ்லாம் அமைதி மார்க்கம்; தமிழர்கள் கொலைவெறியர்கள் என்றார். அவர் மூலம்தான் இச்சம்பவத்தை நான் அறிந்தேன் (http://www.flickr.com/photos/39219599@N00/) . முஸ்லீம்களை விரட்டி அடித்து அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் மிருகங்கள் தமிழர்கள் என்றார் அவர். இந்த சம்பவம் எப்படி முஸ்லீம்களுக்குள் ரகசியமாக பரப்பப்பட்டு இருக்கிறது என்பது எனக்கு புரிந்தது: http://www.lankanewspapers.com/news/2007/8/18217_space.html ). 1991ல் இஸ்லாமியர் கூடவே இருந்த்து கொல்லும் புற்றுநோய் எனக் கருதிய விடுதலைப் புலியினர் பல்லாயிரக் கணக்கான முகமதியர்களை ஜாஃப்னாவிலிருந்து வெளியேற்றினர்(http://www.slmc.org.uk/thrmus1.htm). தமிழ் முஸ்லீம்களோ ஜிகாதி என்ற பெயரில் மூலம் பாகிஸ்தான், வங்காள தேசத்திலிருந்து ஆயுதங்களைப் பெற்று ஈழத்தமிழர்களைக் கொன்றனர். ஆக, விடுதலைப் புலியினருக்கு உதவுதல் நேரடியாக முகமதியரைப் பகைத்துக் கொள்ளுதலாகும். இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு உதவுவாரா கருணாநிதி?


இலங்கை அரசுக்கு எவ்வளவு பணம் செலவானாலும் சரி, பேரழிவு ஆயுதங்கள் உடனடியாக வேண்டும் என்ற நிலை. பாகிஸ்தானிலோ அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த உயர்தர ஆயுதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வங்காள தேசத்திற்கோ கொள்ளை லாபத்தில் ஆயுதம் விற்ற வியாபாரமும் ஆச்சு.. முஸ்லிம்களை ஆயிரக் கணக்கில் கொன்ற ஹிந்துக்களை (விடுதலைப் புலிகளை) பழிவாங்கியதாகவும் ஆச்சு.. இரு நாடுகளும் ராணுவ தளவாடம் விற்று லாபமடைந்தால், பார்த்துக் கொண்டிருக்க இந்தியா என்ன இளிச்சவாயா? ஆகவே, இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசு, இஸ்லாமிய வங்காளதேசக் குடியரசுடன் ஆயுத விற்பனைப் போட்டியில் இறங்கிய 'மதசார்பற்ற இந்திய குடியரசும்' தமிழனைக் கொல்ல சிங்கள ராணுவத்துக்குத் தோதான விலையில் ஆயுதம் விற்றது. இதுமாதிரி இவர்களை இந்தியாவே கொல்லலாமா? என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலாக இந்திய அரசுக்கு, 'ராஜீவைப் படுகொலை செய்தனர்' என்ற ஒரே காரணம் போதுமானதாக இருக்கிறது. 'ஆயுத விற்பனையைப் பற்றி என்னிடம் மத்திய அரசு சொல்லவில்லை' - (Dinamalar Jan-22nd) என்று பகுத்தறிவாளருக்கே உள்ள 'யதார்த்தத்துடன்' பேசுகிறார் கலைஞர். (என்ன அப்டூ டேட் நாலேட்ஜ் ) இவரைத்தான் தமிழன் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறான். சரி, விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பால் தாக்கரே மற்றும் வெகுசில பிஜேபியினர் தவிர, இதர வட இந்திய தலைவர்களுக்கு 'ராஜீவைப் படுகொலை செய்தனர்' என்ற காரணம் போதும். தமிழினத்தலைவர் கருணாநிதிக்கு? விடுதலைப் புலிகளுக்கு எதிராக எல்லா இஸ்லாமிய நாடுகளும், இஸ்லாமிய சமுதாயமும், தமிழ் முஸ்லீம்களும் இருக்கும்போது அவர்களின் ஓட்டு வங்கிக் கணக்கே போதுமானதாக இருக்கிறது என்பது என் அனுமானம். அதனால்தான் 90 களுக்குபின் கொஞ்சம் கொஞ்சமாக ஈழத்தமிழரை மறந்து கஞ்சி குடிப்பதிலேயே காலம் தள்ளினார் தமிழினத்தலைவர். ஈழத்தமிழர்க்காக ஓங்கிக் குரல் கொடுத்த வை.கோவைக்கூட விடுதலைப் புலிகளை வைத்து தன்னைக் கொல்லச் சதி செய்ததாகக் குறை கூறினார்.

எம்ஜியார் ஈழத்தில் பிறந்து, ஈழத்தமிழர்க்கு நல்லது செய்து, ஈழத்தமிழர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்கு உகந்தவர். கலைஞரோ விடுதலைப் புலிகள் தன்னை கொலைசெய்து வைகோவை முதல்வராக்க முயற்சி செய்கின்றனர் என்று கூறியவர். (வாஸந்தி, தீராநதி -07). கொலைப்பழி சுமத்துபவரா ஈழத்தமிழருக்கு நல்லது செய்வார் ? விடுதலைப் புலியினர் தன்னை கொன்று விடுவார்கள் என்ற எண்ணம் இவருக்கு இருந்தது.

விடுதலைப்புலிகள் ராஜீவ் என்ற ஒரு உயிரைக் கொன்ற துன்பியல் நிகழ்வுக்கு அவர்களின் பார்வையில், காரணமாவது உள்ளது. ராஜீவ் எந்தவிதக் காரணமுமின்றி ஆயிரக் கணக்கான தமிழ்ர்களின் உயிரைப் பறித்தார். தமிழ்ப் பெண்களின் கற்பழிவதற்குக் காரணமானார். அப்பு அல்லது நாயகன் போன்ற திரைப்படங்களில் நாயகன்(ஹீரோ) அயோக்கியனான, கொலைகாரனான காவல் அதிகாரியைக் கொன்றால் கைதட்டுகிறோம். அந்த அயோக்கிய காவல் அதிகாரியைப் போல் ஆயிரம் மடங்கு துயரங்கள் நடக்க ராஜீவ்தானே காரணம்? ஆயிரம் அராஜகங்களுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளில் ஒரே ஒரு நாயகன் எழுவது, எப்படி அவர்களின் பார்வையில் தவறாக இருக்கமுடியும்? ராஜீவ் அருணாசலப் பிரதேசத்திலும், காஷ்மீரிலும், அஸ்ஸாமிலும் அந்நிய சக்திகளை, முகமதியர்களை அடக்க வேண்டிய இராணுவ வீரர்களை, விரயமாக தேவையேயில்லாமல், மதச்சார்பின்மையைக் காப்பதற்காகவோ என்னவோ, இலங்கையிலேயே தங்கவைத்தார். 'Idle mind is evils workshop' என்பதுதான் அமைதிப்படை வீரர்களிடம் நடந்தது .அமைதிப்படையினர் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களைச் சிதைத்தனர். சிதைந்த குடும்பங்களின் கதறலுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? அமிர்தலிங்கத்தை கொலை செய்ததனால் விடுதலைப் புலிகள் மீது வெறுப்பு பாராட்டும் தமிழினத்தலைவர், ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லப்பட காரணமானவரின் கட்சியுடன் விருப்பு பாராட்டக் காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? சிறுபான்மையினரின் ஓட்டுக்களே!.

காவேரி ஆணையத்தின் மேல் முறையீட்டுக்கான 'முதல்வர்கள் - பிரதமர் சந்திப்பில்' தமிழ்நாட்டை அலட்சியப் படுத்திய பிரதமரை, ஜெயலலிதாவாவது 'மிஸ்டர் வாஜ்பாயீ உங்களிடம்தான் நான் கேட்கிறேன்' , யாரும் துணிந்திராத வகையில் பெயர்சொல்லி அழைத்து ரௌத்ரம் பழகினார். தமிழினத்தலைவரோ 'ஹொகெனெக்கல் நம்மளுதே' என்று நாக்கில் நரம்பில்லாமல் கர்நாடக பி.ஜே.பியினர் கத்தியபோது,
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி
(சொல்லாமல் குறிப்பறிபவன் கடல் சூழ்ந்த நாட்டையே தன்கீழ் கொணர்வான்)
என்னும் திருக்குறளுக்கேற்ப கடல் சூழ்ந்த நாட்டை, தானே ஆளவேண்டும் என்பதற்காக, சொல்லாமல் சோனியாவின் குறிப்புணர்ந்து அமைதி காத்தார் தமிழினத் தலைவர்.

"கருணாநிதி உங்களுக்கு உதவினாரா?" என்ற கேள்விக்கு பதிலாக, கிடையாதெனவும் எம்ஜியாராவது ஐந்து கோடி ரூபாய் சொந்தப் பணத்தை விடுதலைப் புலிகளுக்காகத் தன்னிடம் வழங்கியதாகவும் ஆண்டன் பாலசிங்கம் ஜூலை 2006ல் கூறினார்; தற்போதைய இடைத்தேர்தலில் திருமங்கலத்தில் ஓட்டுக்காக கொடுத்த பணத்தைக்கூட ஈழத்தமிழனுக்காக கருணை நிதி கொடுத்ததில்லை மாண்புமிகு. முதல்வர் கருணை நிதி.

முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எப்போதுமே எதிரியே என்ற உண்மையை நான் சொல்லவில்லை. முஸ்லீம்களேதான் சொல்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பத்திரிகைகளில், வலைத்தளத்தில் முஸ்லீம் என்பவன் தமிழனாக இருக்கமுடியாது; தமிழன் முஸ்லீம்களின் எதிரியே என்னும் அளவுக்குத் தமிழர்களைச் சித்தரித்து செய்திகள் இருக்கும் (http://www.slmc.org.uk/). 'LTTE' என்று குறிப்பிடாமல் நேரடியாக தைரியமாக 'Tamils' என்று சொல்லிதான் வசைபாடி இருப்பார்கள்('Tamils' - அதாவது எல்லாத்தமிழரும் முஸ்லீம்களுக்கு எதிரியே;). ஆனால் தமிழினத்தலைவரோ நோன்புக்கஞ்சி குடித்து இஸ்லாம் உவகையளிப்பதாகக் கூறுவார். இதைவிட முரண்பாடே இருக்க முடியாது. இவரைப் தமிழினத் தலைவர் எனப் பாராட்டுவதை விட வெகுளித்தனமே இருக்க முடியாது.

உணமையில் முதலமைச்சர் கருணாநிதி செய்த ஒரே சாதனை என்னவெனில், மலேசியாவிலும், ஈழத்திலும், தமிழநாட்டிலும் தமிழர்களுக்கு பரம எதிரியாக இருக்கும் முஸ்லீம்களை, தமிழ்நாட்டில் தமிழருக்கு நட்பு இனமாகத் தோன்றும் வகையில் சதி செய்து பொய்த்தோற்றம் உருவாக்கியதும்; 'இந்து, தமிழன் அல்ல' என்று தமிழ்மேலேயே வெறுப்புறும் வகையில் தொடர்ந்து பழித்துச் சொல்லி , 'வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடினேன்' என்னும் குணமுடைய ஹிந்துத் தமிழர்களை, ஈழத்தமிழன் சாகும்போது கூட அக்கறை காட்டாத அளவுக்குப் பிரித்து வைத்திருப்பதும்தான். தெய்வநம்பிக்கையுள்ள, மதப்பற்றுள்ள இந்துக்களுக்கு தமிழரின் மேல் உள்ள அக்கறை குறைய கருணாநிதியே காரணம். வருஷப் பிறப்பை தன்னிஷ்டப்படி மாற்றி, இந்து என்றால் திருடன் என்று முகமதிய மொழியான பெர்ஸியனில் உள்ளது என்று கூறி, பாம்பைக் கண்டால் அடிக்காதே, பாப்பானைக் கண்டால் அடி என்று சொன்னால் காலங்காலமாய்த் தமிழை வளர்த்த ஹிந்துக்களுக்கு இனிமேல் எப்படி தமிழன் மேல் பற்று வளரும்?


கருணாநிதிக்கு அரசியல் செய்ய பிரிவினை தேவை. ரத்தக்களரி அவசியம். தமிழருக்குள் பிரிவுகள் இன்றியமையாதவை. தேசிய முன்னணியில் 97ல் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு ஏற்பட்டபோது கணிசமான எம்.பி க்கள் கையிலிருந்தாலும் பின்வாங்கியவர் தமிழினத் தலைவர். ஈழப்பிரச்னையிலும், காவிரிப் பிரச்னையிலும் சிறிதும் அக்கறை இருந்தால் இரு பிரச்னைகளயுமே நன்கறிந்த, காவிரிப் படுகையிலேயே வாழ்ந்த மூப்பனாரைப் பிரதமராக்கி பிரச்னைகளை சாதகமாகக் கையாண்டிருக்கலாமே? அப்பொது மாற்று மாநிலத்தான் ஆண்டால் பரவாயில்லை என்று நழுவியவர் தமிழினத்தலைவர். ஆனால் 2001 ஆகஸ்ட் 30ல் மூப்பனார் காலமானவுடன் தனது 40 வருட 'உடுக்கை இழந்தான் கை' போன்றக் காவிய நட்பை எண்ணிக் கண்ணீர் விடும் வாய்ப்பை நழுவவிடவில்லை.

தற்போது ஈழப்பிரச்னையில் சுப்ரமணியம் சுவாமியின் நிலை என்னவோ அதே நிலைதான் கலைஞர் கருணாநிதியுடையதும். ஆனால் கோர்ட்டுக்குள் சுப்ரமணியம் சுவாமியை அடித்த மாதிரி மு.க.வை அல்லது எப்போதுமே புலிகளுக்கு எதிரான ஜெ.ஜெ.வை அடிக்க வேண்டாம், எதிர்த்து குரல் கொடுக்கவோ, சாதியைச் சொல்லி திட்டவோ முடியுமா வக்கீல்களால்? உண்மையில் அப்போது வாலை சுருட்டி கால்களுக்குள் வைத்துக் கொண்டு பெண் ஞமலியாய் ஓடுவார்கள் பகுத்தறிவாளர்கள். பகுத்தறிவாளர்களுக்கு மு.க.வும் முகமதியர்களும் தமிழருக்குச் செய்த கேடுகள் தெரியாமலில்லை. ஆனால் அவர்களைத் தட்டிக்கேட்கும் அளவுக்கெல்லாம் வீரம் இருக்க பகுத்தறிவாளன் ஒன்றும் ஈழத்தமிழன் இல்லை. ஏதோ, இதுவரை தமிழருக்கு எந்தக்கேடுமே செய்யாத இளிச்சவாய் பிராமணன் கிடைத்தால் தன் வீரத்தைக் காண்பிப்பான். குஷ்புவுக்கு கோவில் கட்டுவான். கருணாநிதிக்குக் கைதட்டுவான். பாதிரியார்களுக்கு ஆமென் போடுவான். அவ்வளவுதான். கருணாநிதிக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் முகமதியரின் வரலாறு தெரியாமலில்லை. முகமதியர் மோப்லாவில் தலித்களை கொன்ற வரலாறும், ஈழத்தில் கொல்லும் வரலாறும் தெரியாமல் இல்லை. பகுத்தறிவாளர்கள், கருணாநிதி, முகமதியர் மூவருக்குமே தமிழரிடம் அக்கறையில்லை. உண்மையில் இவர்கள் தமிழரே இல்லை.

மொத்தத்தில் தமிழினம் அழிய முக்கிய காரணம் இம்மூவரும்தான்.. ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தின் இறையாண்மையை அழித்தால் போதும். அதை ரகசியமாகச் செய்வதில் தான் இவர்களின் வெற்றியே அடங்கியுள்ளது. சிறையின் விரிவை விடுதலை என எண்ணிக் கொண்டிருப்பதில்தான் தமிழனின் தோல்வியே இருக்கிறது.
====================
கார்கில் ஜெய்